தீ பிடித்து வீடு நாசம்

தீ பிடித்து வீடு நாசம் அடைந்தது.;

Update: 2021-07-04 19:00 GMT
சாயல்குடி,
கடலாடி அருகே தேரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சர்க்கரை மகன் மாடசாமி. விவசாயி. நேற்று அந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ பற்றி எரிந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி தீயணைப்பு அலுவலர் பொன்னையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்தில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள்  கருகி நாசமாகின. இது குறித்து கடலாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்