மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலியானார்.

Update: 2021-07-04 18:47 GMT
நயினார்கோவில், 
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் தாளையடிக்கோட்டை  கிராமத்தில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது தாளையாடிக்கோட்டை அருகே உள்ள பாப்பர்கூட்டம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த கணேசன் மனைவி மீனாட்சி (வயது50) என்பவர் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்