முதுகுளத்தூரில் இடியுடன் மழை

முதுகுளத்தூரில் இடியுடன் மழை பெய்தது.

Update: 2021-07-04 18:44 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதிகளான இளஞ்செம்பூர், ஏனாதி, பூங்குளம், ஒருவாநேந்தல், கண்டிலான், ஆப்பனூர், நெடுங்குளம், மானங்கரை ஆகிய கிராமங்களில் ½ மணி நேரம் இடி மின்னலுடன் மழை பெய்தது. கடந்த 5 நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மாலை 4 மணிக்குமேல் ½ மணி நேரம் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் முதுகுளத்தூர் நகரில் மிதமான மழை பெய்ததால் நகரில் பள்ளமான பகுதிகளான அரசு மருத்துவமனை முதல்தெரு, நாடார்தெரு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

மேலும் செய்திகள்