இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-04 18:39 GMT
கரூர்
மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 26). சுதாகர் கடந்த 3 ஆண்டுகளாக மஸ்கட்டில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இதனால் புவனேஸ்வரி தனது குழந்தையுடன் கரூர் வெண்ணைமலை உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் புவனேஸ்வரிக்கு கடந்த ஓராண்டாக  வயிற்றுவலி இருந்துள்ளார். இதனால் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்