தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-04 18:33 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் இவரின் வேலையை அவரின் மகன்களில் ஒருவருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவரின் மகன்கள் ராஜகுரு மற்றும் வீரமணிகண்டன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இதுதொடர்பாக இவர்களிடையே ஏற்பட்ட தகராறில் வீரமணிகண்டனை ராஜகுரு அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த வீரமணிகண்டன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜகுருவை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்