மானாமதுரை அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த நாட்களில் 40 ஆடுகள் செத்தன
மானாமதுரை அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த நாட்களில் 40 ஆடுகள் செத்தன. எனவே நோய் தாக்குதலில் ஆடுகள் இறந்தனவா? ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த நாட்களில் 40 ஆடுகள் செத்தன. எனவே நோய் தாக்குதலில் ஆடுகள் இறந்தனவா? ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
40 ஆடுகள் செத்தன
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரும்பாலானோரின் ஆடுகள் திடீர், திடீரென செத்து விழுந்தன.இதனால் கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த செருவலிங்கம்(வயது 60) என்பவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு புகார்
மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் ஆடுகளை நோய் எதுவும் தாக்கியதா? என தெரியவில்லை. இது குறித்து கால்நடைத்துறையினரும், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம். கால்நடைத்துறையினர் விரைந்து வந்து இறக்கும் தருவாயில் உள்ள மற்ற ஆடுகளையும் காப்பாற்ற வேண்டும்.
நோய் தாக்கியதா?
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை
ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து ஆடுகள் இறந்த சம்பவம் குறித்து இதுவரை எங்களுக்கு தகவல் யாரும் தெரிவிக்கவில்லை. நாளை(அதாவது இன்று) சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடைத்துறையினர் நேரில் சென்று கடந்த சில நாட்களில் இறந்த ஆடுகள் நோய் தாக்கி இறந்ததா? என்பது குறித்து ஆய்வு நடத்துவோம். கால்நடை வளர்ப்போர் தங்களுடைய ஆடு, மாடுகளுக்கு ஏதாவது நோய் தாக்கி அறிகுறி தெரிந்தால் உடனே கால்நடைத்துறையை அணுக முன் வர வேண்டும். அப்போது தான் கால்நடைகள் நோய் தாக்கி இறப்பதை தடுக்க முடியும். தற்போது ஒரே கிராமத்தில் அதிகமான ஆடுகள் இறந்த தகவல் கிடைத்து இருப்பதால் அது பற்றி நேரில் சென்று விசாரணை நடத்துவோம். நோய் தாக்குதலில் உள்ள மற்ற ஆடுகளை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.