மாமியார் வீட்டை சேதப்படுத்திய ராணுவ வீரர் கைது

காரைக்குடி அருகே மாமியார் வீட்டை சேதப்படுத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-04 17:49 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் சரகம் நாகவயல் சாலையில் வசிப்பவர் கார்த்திகா (வயது 32). இவரது கணவர் ஆனந்தம் (35) இவர் பஞ்சாபில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. குழந்தையை பார்க்க ஆனந்தம், கார்த்திகா வீட்டிற்கு வந்தார். அப்போது ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தம் அவரது மனைவி, மாமியார், மாமனார் ஆகியோரை ஆபாசமாக பேசி வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் ராணுவ வீரர் ஆனந்தம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்