பணம் வைத்து சூதாட்டம் 12 பேர் கைது
சங்கராபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் 12 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்தலி, ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெடுமானூரில் அரசமரத்தின் அருகில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் சதீஷ்(வயது 31), சூர்யா(25), சின்னத்தம்பி சதீஷ்(28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் தேவபாண்டலம் மாரியம்மன் கோவில் அருகே சூதாட்டம் ஆடிய அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(40), ராஜா(33) ஆகிய 2 பேரையும், காலனி பகுதி அரசமரத்தடி அருகில் சூதாட்டம் ஆடிய அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன்(50), ஏழுமலை(32), ரவிச்சந்திரன்(40) ஆகிய 3 பேரையும், வடசிறுவள்ளூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சூதாட்டம் ஆடிய அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(49), தங்கராஜ்(60), நாராயணன்(43), ராமச்சந்திரன்(40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.1,150-ஐ பறிமுதல் செய்தனர்.