சின்னசேலத்துக்கு 2600 டன் புழுங்கல் அரிசி வந்தது
ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2600 டன் புழுங்கல் அரிசி வந்தது
சின்னசேலம்
ஒடிசா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் எடையுள்ள 51 ஆயிரம் மூட்டை புழுங்கலரிசி சின்னசேலம் ரெயில் நிலையத்தில் நேற்று வந்து இறங்கியது. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு சின்னசேலம்-கூகையூர் சாலையில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைத்தனர். இந்தப் பணியினை கிடங்கு மேலாளர் பிரபு, உதவியாளர் கார்த்திக், இந்திய உணவுக் கழக மேலாளர் ராமலிங்கம், ஒப்பந்ததாரர் தியாகராஜன், சேமிப்பு கிடங்கு துணை மேலாளர் சுந்தரமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த அரிசி மூட்டைகள் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.