பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
ஆண்டிப்பட்டி அருேக பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் ரத்தினான் (வயது 30). இவர் தனியார் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவர், 17 வயதான பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கோவைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த மாணவிக்கு ரத்தினான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோருக்கு தகவல் ெதரிவித்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கோவைக்கு சென்று, ரந்தினானை பிடித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.