கூடலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

கூடலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-04 16:44 GMT
கூடலூர்:
கூடலூர் சூளைமேடு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர், அந்த சிறுமியுடன் கம்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். 
இதற்கிடையே சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, அவரை சரவணன் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார், கம்பத்தில் இருந்த சரவணனை பிடித்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் சிறுமியை போலீசார் மீட்டு, கொடுவிலார்பட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்