போளூா் அருகே; ரெயிலில் சிக்கி 16 ஆடுகள் பலி
போளூர் அருகே ரெயிலில் சிக்கி 16 ஆடுகள் செத்தன.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ரெயில்வே தண்டவாளம் பகுதியில் ஆடுகள் நேற்று மாலை மேய்ந்துக் கொண்டிருந்தன.
சுமார் 4 மணி அளவில் திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் போளூர் மார்க்கமாக சென்றது. மேய்ச்சலில் இருந்த ஆடுகள் ெரயிலின் சத்தத்தில் மிரண்டு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் ஓடின. அப்போது ரெயில் சக்கரங்களில் சிக்கி 16 ஆடுகள் துடிதுடித்து இறந்தனர்.
ஆடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் இறந்த ஆடுகளை எடுத்து சென்று விட்டனர்.