செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்,
கடலூர் மாவட்டம் பெரியபுரங்கணி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சசிகுமார் (வயது 21). காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். சசிகுமார் செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்தார். முதலில் சாதாரணமாக விளையாடியது நாளடைவில் அதற்கு அடிமையானார். இதில் மனஉளைச்சளில் இருந்த சசிகுமார் நேற்று தான் தங்கி இருந்த அறையில் யாரும் இல்லாதபோது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.