திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள காத்திருந்த பொதுமக்கள்
திருவள்ளூரில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
திருவள்ளூர்,
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. போதிய தடுப்பூசி இல்லாததால் பல இடங்களில் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்த வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.