கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பெண் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர் வவுனியாவை சேர்ந்த ராணி (வயது 55). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தீக்குளித்து உயிரிழந்த ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.