பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு

பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-01 21:34 GMT
பெருந்துறை
பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.
சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து பாலகிருஷ்ணன் பெருந்துறை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். இது தற்போது பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்