ஓய்வுபெறும் நாளில் கலெக்டர் அலுவலக உதவியாளர் சஸ்பெண்டு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வருவாய்துறை ஜி பிரிவு உதவியாளர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வருவாய்துறை ஜி பிரிவு உதவியாளர் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
மோசடி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய்துறை ஜி பிரிவு அலுவலக உதவியாளர் தசரதராமன் (வயது60). ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளி நிதி ரூ.9 மோசடி செய்த வழக்கில் இவர் 7-வது நபராக சேர்க்கப்பட்டு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்ற வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகாரின்படி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் தசரதராமன் கடந்த 23-ந் தேதி தன்னிலை விளக்கம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த 30- ந் தேதி தசரதராமன் ஓய்வுபெற இருந்த நிலையில் இவர் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதால் தசரதராமனை மாவட்ட கலெக்டர் சந்திரகலா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார்.
பரபரப்பு
ஓய்வு பெறும் நாளில் குற்றவழக்கு தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.