பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-07-01 21:18 GMT
பவானிசாகர்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,486 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 93.40 அடியாக இருந்தது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,458 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 93.32 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்