தொழிலாளி கைது
பட்டிவீரன்பட்டி அருகே ஓடையில் மணல் அள்ளிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் ஓடையில் மணல் அள்ளுவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது, ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த நெல்லூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கோட்டைச்சாமி (வயது 45) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.