1½ வயது பெண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை

கோலார் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 1½ பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Update: 2021-07-01 20:50 GMT
கோலார்:

கொலை-தற்கொலை

  கோலார் அருகே சன்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி பானுபிரியா (வயது 22). இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் ஹரீசுக்கும், பானுபிரியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பானுபிரியா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

  ஆனால் தான் இறந்து விட்டால் குழந்தையை கவனிக்க யாரும் இல்லை என்று கருதிய பானுபிரியா, குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். அதன்படி நேற்று மதியம் பானுபிரியா பெற்ற குழந்தை என்று கூட பாராமல் தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்குப்போட்டு பானுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

  இதுபற்றி அறிந்ததும் கோலார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுபிரியா, குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குழந்தையை கொன்று பானுபிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது.

  இதுகுறித்து கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் ஹரீசை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சன்னாபுரா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்