மீனவர்களுடன் பாறை மீது ஏறி நின்ற விசைப்படகு
மீனவர்களுடன் பாறை மீது விசைப்படகு ஏறி நின்றது.;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பவுல், செல்வம், அபியான், சந்தியாகு செந்தூரப் பாண்டியன் 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேசுவரம் திரும்பிக் கொண்டிருந்தனர். பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக திடீரென இந்த படகு ஆழமான கடல் பகுதியை விட்டு நகர்ந்து ஓலைக்குடா அருகே கடல் பகுதியில் ஆழம் குறைந்த பகுதியில் உள்ள பாறை மீது ஏறி நின்றது. அதன் பின்னர் அந்த வழியாக மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் தங்களது படகுகளில் 5 மீனவர்களையும் படகில் ஏற்றி கரை கொண்டுவந்து சேர்த்தனர்.