கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-01 20:33 GMT
ஜெயங்கொண்டம்:

5 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் மறைமுகமாக நடைபெறும் மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்த கருணாநிதி மகன் கணேசன்(வயது 29), அண்ணா நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் சச்சின்(22), ரவி மகன் நிஜந்தன்(19), காமராஜர் நகரைச் சேர்ந்த காமராஜ் மகன் விக்னேஷ்(20), கும்பகோணம் இந்திரா காந்தி சாலையை சேர்ந்த பாஸ்கர் மகன் ராஜா(23) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தண்டனையை கடுமையாக்க வேண்டும்
இந்நிலையில் இப்பகுதியில் கஞ்சா விற்பனையால் சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் சிறுவர்களை பாதுகாக்கும் வகையில், தற்போது மேற்கொண்ட நடவடிக்கைபோல் இரும்புக்கரம் கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை அடக்குவதுடன், மேலும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும், போலீசாருக்கும், சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்