கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-07-01 20:33 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 80, 75, 74 வயதுடைய முதியவர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 18 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 276 பேர் மட்டுமே கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 712 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,533 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 540 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

மேலும் செய்திகள்