ஊருக்குள் புகுந்து ஹாயாக உலா வந்த முதலை

கார்வார் அருகே ஊருக்குள் புகுந்த முதலை ஹாயாக உலா வந்தது.

Update: 2021-07-01 20:17 GMT
பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாட்டம் கார்வார் அருகே தண்டேலி உள்ளது. இது பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இதன் அருகில் கோகிலபனா என்ற கிராமம் உள்ளது. இதையொட்டி காளி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் அதிகளவில் முதலைகள் வசிக்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை காளி ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக நடந்தபடி கோகிலபனா கிராமத்திற்குள் நுழைந்தது. அந்த கிராமத்தின் தெருக்களில் ஹாயாக உலா வந்த முதலை, அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை கூட வேட்டையாடாமல் நடைபோட்டது. முதலில் ஊருக்குள் முதலை புகுந்ததும் அலறியடித்து ஓடிய கிராம மக்கள், பின்னர் முதலையை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் செல்போனில் முதலையை படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கயிற்றால் கட்டி முதலையை பிடித்து மீண்டும் காளி ஆற்றில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்