குண்டடம் அருகே காரில் மது கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டடம் அருகே காரில் மது கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டடம்:
குண்டடம் அருகே காரில் மது கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 904 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
திருப்பூர், கோவை, ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஒருசிலர் அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குண்டடம் போலீசார் கோவை சாலையில் உள்ள சூரிய நல்லூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுக்கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து குண்டடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரித்த போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32), மதுரையை சேர்ந்த ராஜாமுகமது(25), நத்தம் கருவைமுளையூரை சேர்ந்த கண்ணன் (50) ஆகிய 3 பேரும் மதுரையில் இருந்து 904 மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கி தாராபுரம், குண்டடம் வழியாக கோவைக்கு கடத்திசென்று அதிக விலைக்கு இருப்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களிடம் இருந்த 904 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
=