தொழிலாளி எட்டி உதைத்ததால் வாகனத்தில் அடிபட்ட டிரைவர் சாவு

மது போதையில் நின்ற போது உதைத்து தள்ளியதால் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-01 20:14 GMT
குழித்துறை:
மது போதையில் நின்ற போது உதைத்து தள்ளியதால் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
டெம்போ டிரைவர்
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43), டெம்போ டிரைவர். இவருக்கு ராஜகுமாரி     என்ற     மனைவியும், 2 குழந்தைகளும்   உள்ள னர். சார்லசுக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சார்லஸ் இரவில் மது போதையில் பயணம் சந்திப்பு பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சாலையோரம் நின்றவாறு போதையில் ஆபாச வார்த்தைகளால் உளறி கொண்டிருந்ததாக தெரிகிறது.  
உதைத்துத் தள்ளிய   தொழிலாளி
அங்கு அதே பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் (42) என்ற தொழிலாளி நின்று கொண்டிருந்தார். அவர் டெம்போ டிரைவர் சார்லஸ், தன்னைதான் திட்டுவதாக நினைத்து அவரை காலால் எட்டி உதைத்து சாலையில் தள்ளினார். அந்த சமயத்தில், சார்லஸ் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு விழுந்தார். இதனால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சார்லஸ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சார்லஸ் பரிதாபமாக இறந்தார்.
கொலை வழக்காக மாற்றம்
இது தொடர்பாக ஏற்கனவே சார்லசின் மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார், டிரைவரை உதைத்து தள்ளியதாக வர்க்கீஸ் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது சார்லஸ் இறந்ததால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று வர்க்கீசை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள வர்க்கீசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்