மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்

மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-01 19:59 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மழவராயநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மழவராயநல்லூரில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அதனை ஓட்டி வந்த டிரைவர் சாலையின் ஓரமாக சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சரக்கு ஆட்டோவில் சோதனை செய்தபோது, அதில் மழவராயநல்லூர் மருதை ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து விக்கிரமங்கலம் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்