பனமரத்துப்பட்டி அருகே நட்சத்திர ஆமை பிடிபட்டது
பனமரத்துப்பட்டி அருகே நட்சத்திர ஆமை பிடிபட்டது
பனமரத்துப்பட்டி
பனமரத்துப்பட்டி அருகே நூலத்துகோம்பை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 30) என்பவரது தோட்டத்தில் ஆமை ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், செல்வகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த ஆமையை மீட்டு கொண்டு வந்தனர். அஸ்தம்பட்டி சேர்வராயன் தெற்கு வனச்சரக அதிகாரிகள் போலீஸ் நிலையம் வந்தனர். அந்த ஆமையை எடுத்து சென்றனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது அரியவகை நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது. நூலத்துகோம்பை, போதமலை அடிவார பகுதி என்பதால், மலைப்பகுதியில் இருந்து ஆமை இங்கு வந்திருக்கலாம் என்றனர்.