திருச்சி அரசு மருத்துவமனையில் `கேக்' வெட்டி கொண்டாட்டம்

மருத்துவர் தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் `கேக்' வெட்டி கொண்டாட்டப்பட்டது.

Update: 2021-07-01 19:18 GMT
திருச்சி
திருச்சி
இந்தியாவில், மருத்துவத்துறையில் தன்னையே அர்ப்பணித்து கொண்ட பி.சி.ராய் எனப்படும் டாக்டர் பிதான் சந்திரராய் பிறந்தநாளான ஜூலை 1-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருச்சி அரசு மருத்துவமனையில் `கேக்' வெட்டி மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. பெண் மருத்துவர்களுக்கு ரோஜாப் பூ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பத்மநாபன், டாக்டர் ஏகநாதன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, கொரோனா முதல் அலை மற்றும் 2-வது அலை காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா 3-வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், அதேநேரம் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.
 திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு இனிப்பு வழங்கி மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்