நெல்லைக்கு 5 ஆயிரம் தடுப்பூசி வந்தது; பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து போட்டுச் சென்றனர்

நெல்லைக்கு 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து போட்டுச் சென்றனர்.

Update: 2021-07-01 19:12 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி முகாம்கள் மூடப்படுகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 84 மையங்களில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து மேலும் 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. அவை அனைத்து பல்வேறு மையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போடுவோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.இதேபோல் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்