செய்யாறில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 711 மதுபாட்டில்கள் பறிமுதல். 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 711 மதுபாட்டில்கள் பறிமுதல். 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
செய்யாறு
செய்யாறு டவுன் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செய்யாறு டவுன் வைத்தியர் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மனைவி அமுல் (வயது 40) வீட்டில் பதுக்கி வைத்திருந்த 608 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல புரிசை கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் (43) என்பவர் வீட்டில் சோதனை நடத்தியபோது 17 மதுபாட்டில்களும், அனப்பத்தூர் கிராமத்தில் சரளா (44) என்பவர் வீட்டில் 86 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.