மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2021-07-01 18:12 GMT
சிவகாசி
சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் பள்ளபட்டி ரோடு முருகன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்குள்ள ஒரு தீப்பெட்டி ஆலையின் பின்புறம் கருணாநிதி காலனியை சேர்ந்த லிங்கசாமி (வயது 36) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1170 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதே போல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் கொத்தனேரி கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு மதுபாட்டில்களுடன் இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்