விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,604 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43, 525 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 96 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். 551 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதுடன் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில 301 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை மையங்களில் 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி நார்த்தம்பட்டி. விளாம்பட்டி. புதுப்பட்ட.ி விருதுநகர் லட்சுமி நகர், சூலக்கரை, கருப்பசாமி நகர், பாண்டியன் நகர், மாடர்ன்நகர், அருப்புகோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், எம்.ரெட்டியபட்டி, வன்னியம்பட்டி இளம்திரைக்கொண்டான், மம்சாபுரம், நக்கனேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலின்படி 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.