வாலிபர் கொலையில் 3 பேர் கைது

தேவகோட்டை வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் சிவகாசி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2021-07-01 17:36 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள சிறுவத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது32).மக்கள் நலப்பணியாளர். இவர் தேவகோட்டையில் இருந்து தனது கிராமத்திற்கு சென்ற போது வழிமறித்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக 8 பேர் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சிறுவத்தி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அண்ணன்-தம்பிகளான கனி, காமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கணேசன் ஆகிய 2 பேரும் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்