கலவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கலவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கலவை
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கலவை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்நதது.
தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மாம்பாக்கம், திமிரி, ஆனைமல்லூர் மற்றும் கலவை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ரகுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நாகலேரிசிவா ஆகியோர் தலைமை தாங்கினர்.
பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும், கொரோனா காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிட்டு வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நல்லூர் சம்பத், கலவை நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.