திருவள்ளூர் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான்

திருவள்ளூர் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.;

Update: 2021-07-01 17:03 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் நேற்று 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மான் வயலூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட நீர் நிறைந்து இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் அந்த புள்ளி மான் நீண்ட நேரம் தண்ணீரில் தத்தளித்தபடி வட்ட மடித்தபடி இருந்தது. இதை கண்ட விவசாயிகள் உடனடியாக மப்பேடு போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த மானை வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

மேலும் செய்திகள்