நாகை-செல்லூர் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகை- செல்லூர் இடையேயான சாலை மிகவும் சேதம் அடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

Update: 2021-07-01 16:57 GMT
வெளிப்பாளையம்,

சென்னை-ராமேசுவரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை நாகை புத்தூர் வழியாக செல்கிறது. இந்த சாலையை நாகை நகரத்துடன் இணைக்கும் சாலையாக வடகுடி மற்றும் செல்லூர் சாலைகள் உள்ளன. இதில் செல்லூர் சாலையை நாகை புதிய பஸ் நிலையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோர்ட்டு மற்றும் அரசு அலுவலகங்கள், கடைகளுக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கின்றன.

போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டால் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் இந்த வழியாக செல்வது வழக்கம். இந்த நிலையில் நாகை- செல்லூர் இடையேயான சாலை மிகவும் சேதம் அடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலை பகுதியில் உள்ள தெரு மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலையை சீரமைக்கவும், அங்கு தெரு மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்