உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்கின
கோவையில் உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.
கோவை
கோவையில் உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.
உழவர் சந்தைகள்
கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், வடவள்ளி பகுதிகளில் உழவர் சந்தைகள் உள்ளன.
இந்த சந்தைகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவ தொடங்கியதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உழவர் சந்தைகள் மூடப்பட்டன.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.
செயல்பட தொடங்கின
இந்தநிலையில் தற்போது மாவட்டத்தில் தொற்று பரவல் குறைய தொடங்கியதால், காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. உழவர் சந்தைகளையும் திறக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறக்கப் பட்டு செயல்பட்டன.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் அதிகாலையிலேயே கடைகளை திறந்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் காய்கறி வாங்க காலையில் வாகனங்களில் வந்தனர். சுந்தராபுரம் உழவர் சந்தையில் 35-க்கும் மேலான கடைகள் உள்ளன. 15 கடைகள் மட்டும் திறக்கப் பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் பல கடைகள் திறக்கப் படலாம் என்று தெரிகிறது.
மாவட்டம் முழுவதும் உழவர்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.