வழிகிடைக்குமா வாகன ஓட்டிகள் ஏக்கம்

வழிகிடைக்குமா வாகன ஓட்டிகள் ஏக்கம்

Update: 2021-07-01 16:32 GMT
கோவை

கொரோனா தொற்று பரவலை தடுக்க கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகளின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகள் தவிர ஒரு சில சாலைகள் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. 

அதில் கோவை வாலாங்குளத்தில் கிளாசிக் டவர் சந்திப்பில் இருந்து உக்கடம் பைபாஸ் ரோட்டுக்கு செல்லும் சாலையும் ஒன்று. 

தற்போது கோவையில் கொரோனா குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனால் கோவையில் எப்போதும்போல் போக்குவரத்தும் தொடங்கி இருப்பதால் இரும்பு தடுப்பு கொண்டு அடைக்கப்பட்ட பெரும்பாலான சாலைகள் திறக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள கிளாசிக் டவர் ரோடு மட்டும் இரு புறமும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓடட்டிகள் இந்த சாலை யில் செல்ல எப்போது வழிகிடைக்கும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். 

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா கூறும்போது, வாலாங்குளக்கரை அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை திறந்தால் அங்கு மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லுதல், குளக்கரையை சுற்றிப்பார்க்கும் நிலை ஏற்படும். 

இதனால் கொரோனா மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா குறைந்து இயல்புநிலைக்கு வந்ததும் அந்த சாலை திறக்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்