பாலக்கோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: குளிர்பதன கிடங்கு சுவர் இடிந்து விழுந்தது

பாலக்கோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் மழையால் குளிர்பதன கிடங்கு சுவர் இடிந்து விழுந்தது

Update: 2021-07-01 15:57 GMT
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.20 கோடி மதிப்பீட்டில் அரசு குளிர்பதன கிடங்கு கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கட்டுமான பணி நடைபெற்று வந்தது. சுமார் 200 அடி நீளம் 15 அடி உயரம் கொண்ட இந்த கட்டிட சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது குளிர்பதன கிடங்கிற்காக கட்டப்பட்ட 200 அடி நீளம் கொண்ட ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. வேலையாட்கள் யாரும் கட்டிடத்திற்குள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே குளிர்பதன கிடங்கு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்