மெல்மொணவூர் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

மெல்மொணவூர் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

Update: 2021-07-01 15:43 GMT
வேலூர்

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 311 குடும்பத்தை சேர்ந்த 992 பேர் வசித்து வருகிறார்கள். இந்த முகாமில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு தமிழர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்கள் வசிக்கும் வீடுகளை பார்வையிட்டு அவர்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தரவேண்டும். பொது கழிப்பறை கட்டித் தர வேண்டும். இந்தியாவில் தொடர்ந்து வசிக்க விரும்பும் நபர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தர வேண்டும். நாடு திரும்பும் நபர்களுக்கு கப்பல் வசதி செய்து கொடுக்க வேண்டும். விதவை மற்றம் முதியோர் உதவித்தொகை பெற்று தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் மஸ்தான் உத்தரவிட்டார். ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பேபிஇந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நரசிம்மன், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்