இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நிவாரண உதவி
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நிவாரண உதவி துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருவையாறு,
கோவில்களில் நிலையான மாத வருமானம் இன்றி பணிபுரிந்துவரும் பூசாரிகள், அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணியாளர்களுக்கு திருவையாறு தாலுகாவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராமகுமார் தலைமை தாங்கினார். 56 பேருக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் நெடுஞ்செழியன்,, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் குணசுந்தரி, முன்னாள் பேரூராட்சித்தலைவர் நாகராஜன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்டபாணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன், கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆலய செயல் அலுவலர்கள் ராஜேஷ்மணிகண்டன், ஹரீஷ்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.