மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம். கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்;

Update: 2021-07-01 13:49 GMT
கலசபாக்கம்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிராமப்புறங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கலெக்டர் முருகேஷ் கூறினார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, மகாதேவன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்