மோட்டார்சைக்கிளில் வந்து கைவரிசை: நடைபயிற்சி சென்றவர்களிடம் கத்திமுனையில் அடுத்தடுத்து வழிப்பறி 2 பேர் கைது
நடைபயிற்சி சென்றவர்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்து கத்திமுனையில் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை ஐகோர்ட்டு அருகில் நேற்று முன்தினம் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற இளங்கோவன் என்பவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கத்திமுனையில் பறித்து சென்றனர்.
அதன்பிறகு ராயபுரம் சுங்கச்சாவடி வழியாக எண்ணூர் விரைவு சாலையில் சென்ற மர்மநபர்கள், திருவொற்றியூர் எஸ்.பி.ஐ.காலனி அருகில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த ஜெயக்குமார் என்பவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
பின்னர் வியாசர்பாடி அருகில் போலீசுக்கு தகவல் கொடுப்பவர் என சந்தேகப்பட்டு ஒரு பெண்ணையும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர் மீரான், அசோக், சரவணன், மனுவில், செந்தில், மணி, ஷேக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர், முதலில் சம்பவம் நடந்த ஐகோர்ட்டு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் செல்வதை கவனித்தனர். பின்னர் பாரிமுனை, ராயபுரம், காசிமேடு, சுங்கச்சாவடி, திருவொற்றியூர் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்தான் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின் அந்த வழிப்பறி திருடர்கள் வியாசர்பாடி வரை சென்றதை தனிப்படை போலீசார் அறிந்தனர்.
2 பேர் கைது
அந்த பகுதியில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இயங்கிய செல்போன் ஆய்வுகளை வைத்து, செல்போன் நிறுவனம் மூலம் வழிப்பறி திருடர்களின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து, அந்த செல்போன்களின் சிக்னலை ைவத்து ஆய்வு செய்தனர். அதில் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம் அருகிலுள்ள வெங்கடபுரம் ஏரிக்கரை அருகில் ஒரு பள்ளியில் இருப்பதாக காட்டியது.
நேற்று இரவு தனிப்படை போலீசார் அந்த பள்ளியை சுற்றி வளைத்துபோது அங்கு கஞ்சா போதையில் தூங்கி கொண்டிருந்த புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்த ஆகாஷ் என்ற சங்கிலி ஆகாஷ் (வயது 21), பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரைச் சேர்ந்த சதீஷ் என்ற குண்டு சதீஷ் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் வழிப்பறி செய்த நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் வியாசர்பாடியில் உள்ள நண்பர் வீட்டில் வைத்து இருப்பதாக கூறினர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகள், 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.