கொரோனா பாதிப்பில் இறந்த தம்பதி வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு

கொரோனா பாதிப்பில் இறந்த தம்பதி வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு உறவினர்கள் மீது போலீசில் புகார்.

Update: 2021-07-01 10:51 GMT
சென்னை,

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் சீனிவாசன். டெய்லர் தொழில் செய்கிறார். இவர் தனது 3 சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக ஒரே காம்பவுண்டில் வசித்தார்.

சமீபத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டு இவரது அண்ணன் சந்திரசேகர், அவரது மனைவி திலகவதி ஆகியோர் பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்கள் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் மற்றும் சொத்து பத்திரங்கள் காணாமல் போய் விட்டது. அவை திருட்டு போய் விட்டதாகவும், இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் அவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் கோடம்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்