நத்தம் ஒன்றியக்குழு கூட்டம்

நத்தத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-06-30 21:49 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். 

ஆணையாளர் அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அலுவலக மேலாளர் பாலமுருகன் கூட்ட அறிக்கையை வாசித்தார். 

இதில் குடிநீர், சாலை, தெரு விளக்கு, அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும், கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு தலைவர் பதில் கூறினார். குறிப்பாக பெரிய மலையூர் கிராமத்துக்கு மலை அடிவாரத்தில் இருந்து சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.  

நத்தம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு உள்பட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பார்வதி மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள், உதவி பொறியாளர்கள், பிறதுறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் அலுவலக எழுத்தர் கனகராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்