ஆசனூர் அருகே வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூர் அருகே வாகனத்தை ஒற்றை யானை வழிமறித்தது.

Update: 2021-06-30 21:07 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி சாலையை கடந்து செல்கின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதனால் வனவிலங்குகள் சாலையில் ஜாலியாக உலா வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே காரப்பள்ளம் என்ற இடத்தில் வந்து நின்றது. அதன்பின்னர் ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடியது.
அப்போது அந்த வழியாக ஒரு வாகனம் வந்தது. ஆவேசமடைந்த யானை அந்த வாகனத்தை துரத்தியது. இதனால் வாகன ஓட்டி அச்சம் அடைந்தார். வாகனத்தை திரும்பி பின்னோக்கி சென்றார். அதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. 
இதனால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்