கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர்.

Update: 2021-06-30 21:00 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 588 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். 

இந்த நிலையில் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடைக்கானல் பன்றிமலையை சேர்ந்த 63 வயது முதியவர், சிந்தலக்குண்டுவை சேர்ந்த 82 வயது மூதாட்டி, குள்ளனம்பட்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகல்நகரை சேர்ந்த 75 வயது முதியவர் ஆகிய 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

இதன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கை 592 ஆனது. இதற்கிடையே நேற்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 

மேலும் செய்திகள்