பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
போகலூர்,
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கொள்ளனூர் கிராமம். இந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் கிராமமக்கள் ஆட்டோவில் ரூ. 100 முதல் ரூ.120 வரை செலுத்தி செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் பேருந்து வசதி இல்லாததால் ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் நடந்து வந்து காமன்கோட்டை மற்றும் மென்னந்தி இடையே செல்லும் பஸ்சுக்காக காத்திருந்து ஏறிச் செல்கின்றனர். அதனால் இந்த பகுதியினர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். வெளியூர் வேலைக்கு செல்பவர்களும் இரவு நேரங்களில் தங்களின் ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். எனவே இவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.