108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; அழகான ஆண் குழந்தை பிறந்தது

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

Update: 2021-06-30 20:38 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஆஷாதேவி (வயது 21). இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஆஷாதேவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாடாலூரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் ஆஷாதேவியை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் நிலைமையை உணர்ந்த மருத்துவ உதவியாளர் தமிழ்ச்செல்வன் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தச் சொல்லி அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் ஆஷாதேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்